கத்தியை காட்டி மிரட்டி G Pay-வில் பணம் பறித்த கும்பல்.. அதிரடி காட்டிய போலீஸ்.. கோவையில் அதிர்ச்சி
அன்னூரில் வடமாநில இளைஞர்கள் நான்கு பேரை வழிமறித்து, ஜிபேவில் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மிரட்டி வாங்கிச் சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கெம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகர் குடிநீர் தொட்டி அருகே நடந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நான்கு பேரிடம் கஞ்சா கேட்டு தகராறு செய்த அதே பகுதியைச் சேர்ந்த அந்த கும்பல், பிறகு கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது. மேலும், மூன்று பேரிடம் செல்போன்களையும் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
Next Story