மூச்சு விட முடியாத அளவுக்கு.. முண்டியடித்து ஏறும் மக்கள்.. நள்ளிரவில் திணறிய கிளாம்பாக்கம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல நேற்று இரவும் ஏராளமானோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், நள்ளிரவு நேரத்தில் போதிய பேருந்துகள் கிடைக்காமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர். மேலும் பேருந்துகளில் இருக்கையைப் பிடிக்க முண்டியடித்து ஆபத்தான முறையில் பயணிகள் ஏறினர். குழந்தைகளுடன் ஊருக்கு செல்வதற்காக வந்திருந்த பயணிகளும், பேருந்து கிடைக்காமல் காத்திருந்தவர்களும் பேருந்து நிலையத்திலேயே படுத்து உறங்கினர்.
Next Story