சிறுமியின் ஆடியோவை போட்டு காட்டிய அப்பா -கதறும் தாய்.. 20 நாளா என்ன தான் நடக்குது?

x

சேலம் அருகே 17 வயது சிறுமி கடத்தப்பட்ட நிலையில், அவரை மீட்டு தரக்கோரி பெற்றோர் புகார் அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கல்யாணி. இவர் தனது 17 வயது மகளை, பரத் என்ற இளைஞர் கடத்தி சென்றுவிட்டதாக சூரமங்களம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதலில் வழக்கு பதிவு செய்ய மறுத்த போலீசார் பின்னர் வழக்கு பதிந்துள்ளனர். புகார் அளித்து 20 நாட்கள் ஆகியும் சிறுமி கண்டறியப்படாத நிலையில், சிறுமி தான் கடத்தி செல்லப்பட்டதாக பேசும் ஆடியோவை பெற்றோர் வெளியிட்டுள்ளனர். மேலும், தங்களது மகளை மீட்டு தரும்படி காவல்துறையிடம் கோரிக்கையும் வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்