இளம் நடிகையை பலாத்காரம் செய்தாரா பிரபல இயக்குனர் - கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
பாலியல் வன்கொடுமை புகாரில் மலையாள திரைப்பட இயக்குநர் உமர் லுலுவிற்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.மலையாளத்தில் HAPPY WEDDING, ஒரு அடார் லவ் உள்ளிட்ட படங்களை இயக்கிய உமர் லுலு, சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் நடிகை போலீஸில் புகார் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், பணம் பறிக்கும் நோக்கில் நடிகை பொய் புகார் அளித்துள்ளதாக உமர் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே முன் ஜாமின் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி, உமர் லுலுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. விரிவான விசாரணைக்காக ஜூன் 6ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Next Story