அமிதாப் பச்சன் உதவியை நாடிய கேரள அரசு..வைரலாகும் ட்வீட், வீடியோ - அதிர்ச்சியில் மத்திய அமைச்சர்
அதிகரித்து வரும் இந்தியாவின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கேரளா காங்கிரஸ் மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் குரல் கொடுக்குமாறு நடிகர் அமிதாப் பச்சனிடம் உதவி கேட்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. அதிக கட்டணம் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் பெரும்பாலும் காலியாகவே இயங்குவதாக தொடர்ந்து குற்றம்சாட்டும் கேரளா காங்கிரஸ், தற்போது கொளுத்தும் வெயிலுக்கு நடுவே கூட்ட நெரிசலில் மக்கள் ரயிலில் பயணிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதோடு இந்த பதிவில் அமிதாப் பச்சனை டேக் செய்துள்ள கேரளா காங்கிரஸ், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பிரபலங்களின் கோரிக்கைகளுக்கு உடனே பதிலளிப்பார் என்பதால் சமூக காரணங்களுக்காக இந்த விவகாரம் குறித்து அமிதாப் பச்சன் ட்வீட் செய்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.