"தமிழக மக்கள் ஒவ்வொரு நாளும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர்"- CPM கே.பாலகிருஷ்ணன்
தமிழக மக்கள் ஒவ்வொரு நாளும் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள் என்றும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தவறுகளும், தோல்விகளும் அம்பலமாகி விடும் என்ற அச்சத்தால் சர்வாதிகாரத்தை தமிழக அரசு கட்டவிழ்த்து விடுவதா என பாமக நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் போராட்டம் என்று அறிவித்தாலே அவர்களை முன்னெச்சரிக்கையாக
கைது செய்து போராட்டத்தை முடக்குவதில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளை அடக்குவதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்றும் திராவிட மாடல் அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story