"தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியா?" - கேள்வி எழுப்பிய கே. பாலகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய அவர், தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அரசு அனுமதி மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார். உழைக்கும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற காலம் கடத்தினால், உரிமைகளை மீட்டெடுக்க எதிர்காலத்தில் போராட்டங்களை முன்னெடுப்போம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
Next Story