நிதி நெருக்கடியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்.. சரிசமமாக பங்கு கொடுக்கும் தமிழ்நாடு-கர்நாடகா
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சுமுகமாகச் செயல்பட தமிழக அரசு 380 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது...
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் இந்த நிதியாண்டுக்கான தற்காலிக நிதி தேவை 22 கோடியே 56 லட்ச ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது... 13 கோடியே 6 லட்ச ரூபாய் நிலுவைத் தொகையாக உள்ள நிலையில், ஆணையத்தின் சுமுகமான செயல்பாட்டிற்காக 9 கோடியே 50 லட்ச ரூபாய் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... அதன்படி தமிழ்நாடும், கர்நாடகாவும் தலா 380 லட்ச ரூபாய், கேரளம் நூற்று நாற்பத்து இரண்டரை லட்சம் ரூபாய், புதுச்சேரி நாற்பத்து ஏழரை லட்ச ரூபாய், பணத்தைக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் ஜூலை 31ற்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4ம் தேதி காவிநீர் மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் விவகாரங்கள் தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அஜெண்டாவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது...