ஜாமீனில் வந்த நடிகை கஸ்தூரி.. கோர்ட்டில் முக்கிய மனு
நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள நடிகை கஸ்தூரி, நிபந்தனை தளர்வு கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தெலுங்கு மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய வழக்கில், எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், எழும்பூர் நீதிமன்றம் சமீபத்தின் ஜாமின் அளித்தது. அதன் அடிப்படையில் தினமும் காலை 10 மணிக்கு, எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் அந்த நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கஸ்தூரி தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.
Next Story