பட்டப்பகலில் திருடிய திருடன்... கையில் வசமாக சிக்கியதும் கட்டிப்போட்டு காட்டு அடி அடித்த ஊர்மக்கள்

x

கரூரில் பட்டப்பகலில் திருடிய திருடனை பிடித்து கட்டிவைத்து அடித்த மக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கரூர் பசுபதிபாளையம் பகுதியில் மணி என்பவரின் வீட்டை நோட்டமிட்ட திருடன், ஆளில்லாத சமயத்தில் வீட்டில் புகுந்து திருட முயன்றதாக கூறப்படுகிறது. வீட்டின் உரிமையாளர் வெளியே சாவியை வழக்கமாக வைக்கும் இடத்தில் இருந்து சாவியை எடுத்த திருடன், வீட்டை திறந்து பீரோவில் திருடியுள்ளார். அப்போது வீட்டின் உரிமையாளர் லட்சுமி திரும்பி வந்து பார்த்தபோது, திருடனை கண்டதும் கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் ஓடிச்சென்று, திருடனை கையும் களவுமாக பிடித்து கட்டிவைத்து தாக்கினர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், திருடனை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் திருடனை கட்டிவைத்து பொதுமக்கள் அடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்