அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரில் "கியூ ஆர்" மூலம் மது விற்பனை

x

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதை தடுக்கும் வகையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் விரைவில் கியூ ஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகம் செய்யபட உள்ளது. உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையிலேயே மது பாட்டில் மீது விற்பனை விலையுடன் 'க்யூ ஆர்' குறியீடு ஒட்டப்படுகிறது. அந்த குறியீட்டை ஸ்கேன் செய்து, மின்னணு பரி வர்த்தனை வழியாக பணம் செலுத்தி, மதுபானங்களுக்கு பில் பெறும் வசதியை டாஸ்மாக் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. முதல்கட்டமாக, ராமநாதபுரம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் சோதனை முறையில் கியூ ஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மாவட்டத்திலும், நவம்பர் 30-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் கியூ ஆர் குறியீடு அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மதுபானக் கடைகளில் கூடுதலாக பணம் வசூலிப்படும் என்று கரூர் மாஸ்மாக் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்