கரூரில் வைரலாகும் டாஸ்மாக் வீடியோ - என்ன நடந்தது?
கரூர் அருகே பாலம்மாள்புரம் மதுபான கடையில், பிஓஎஸ் மெஷின் மூலம் வாடிக்கையாளர்களை பணம் செலுத்த விடாமல், தனது சொந்த ஜிபே கணக்கில் பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக மதுபான கடை மேற்பார்யாளர் ராஜ்கண்ணா, விற்பனையாளர் மாணிக்கசுந்தரம், சென்னியப்பன் ஆகிய மூவரும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த புகார் தொடர்பாக நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் விசாரணை நடத்திய நிலையில், அதே கடையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மேற்பார்வையாளர் ராஜ்கண்ணா, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்திய வாடிக்கையாளருக்கு ரசீது தர மறுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
Next Story