"ரூ.500 டூ ரூ.2500 பெண்களோடு உல்லாசம்" "Choosing வாங்க" சொன்னதும் வரிசையாக வந்து நின்ற இளம் பெண்கள்
கரூரில் பள்ளி அருகில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக, வழக்கறிஞர் ஒருவர் ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் ஸ்பா ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆண்களிடம் மசாஜ்க்கு ஆயிரம் ரூபாய் வசூலிப்பதாகவும், பாலியல் ரீதியான சந்தோசத்தை கொடுப்பதற்கு, தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு தனியாக ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்பாவில் இளைஞர்கள் சிலர் விசாரித்த போது, அங்கு பணியில் உள்ள பெண், நேரில் போனில் எல்லாம் பேச முடியாது என்று கூறும் ஆடியோ வெளியாகியுள்ளது. மேலும், நேரில் சென்று விசாரிக்கும் ஆண்களிடம், பெண்களை வரிசையில் அழைத்து தேர்ந்தெடுக்க கூறுவதும், கட்டணம் உள்ளிட்டவை குறித்து பேசுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த ஆதாரங்களுடன், கரூரை சேர்ந்த நீலம் ரகுவரன் என்ற வழக்கறிஞர், மாவட்ட குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் புகாராக அளித்துள்ளார். பெண்கள் பள்ளிக்கு அருகில் இயங்கும் ஸ்பாவால், அங்கு சென்று வரும் ஆண்கள், மாணவிகளை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதாக வேதனை தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் இதுபோன்று 4 இடங்களில் ஸ்பா நடப்பதாகவும், கேமரா பொறுத்த வேண்டும், தெரெப்பி படித்து பயிற்சி பெற்றவர்கள் பணிபுரிய வேண்டும் என்ற சட்டத்தை பின்பற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார். ஸ்பா மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்ததோடு, வீடியோ ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.