ஆசையாக குழந்தைக்கு வாங்கி சென்ற கேக்.. பாக்ஸ்-ஐ திறந்ததும் அதிர்ந்துபோன வாடிக்கையாளர்
கரூரில் ஸ்வீட் கடையில் வாங்கிய கேக் பூசனம் பிடித்து கெட்டுப் போய் இருந்ததால் வாடிக்கையாளர் ஒருவர் வேதனை அடைந்துள்ளார். கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், வீட்டுக்குச் சென்று பிளம் கேக்கை தனது குழந்தைக்கு பிரித்துக் கொடுக்க பார்த்தபோது, கேக் முழுவதுமாக பூசனம் பிடித்து கெட்டுப்போய் இருந்துள்ளது. அதை ஸ்வீட் கடைக்கு எடுத்துச் சென்று கேட்டபோது, மாற்றிக் கொடுப்பதாக கடை ஊழியர்கள் பதில் அளித்துள்ளனர். இதுகுறித்து கரூர் வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மதுரைவீரனிடம் பிரபாகரன் தெரிவித்தபோது, சென்னையில் உள்ள உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் கொடுக்குமாறு கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் விளக்கம் கேட்டதற்கு சென்னைக்கு புகார் அளித்து, அங்கிருந்து உத்தரவு வந்தால்தான் ஆய்வு செய்வோம் என்று பதில் அளித்தார்.