``நான் பெத்தவனும் போய்ட்டான்..எடுத்து வளத்தவனும் போய்ட்டானே..என்ன பாவம் செஞ்சேன்..வாங்கிவந்த வரமா?"

x

``நான் பெத்தவனும் போய்ட்டான்..எடுத்து வளத்தவனும் போய்ட்டானே..என்ன பாவம் செஞ்சேன்..வாங்கிவந்த வரமா?" - நெஞ்சை கிழிக்கும் தாயின் கண்ணீர்

ஒன்றரை வயது சிறுவன் கால்வாயில் விழுந்து பலியான சம்பவம் மனதை ரணமாக்கி இருக்கிறது.. இது சோகம் குறித்து பார்க்கலாம்.. விரிவாக..கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள கட்டளை மேட்டு பகுதியில் தான், இந்த சோகம் நடந்தேறியுள்ளது..

10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கும் இந்த பகுதியில், கணபதி - சித்ரா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள்.. இவர்களது ஒன்றரை வயதே ஆன கிஷாந்த் என்ற குழந்தை வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது..

தாயாரிடம் சாப்பிட மாட்டேன் என முரண்டு பிடித்துக் கொண்டிருந்த குழந்தை கிஷாந்தைக்கு கரையோரத்தில் அங்கும் இங்குமாக விளையாட்டுக் காட்டிக்கொண்டே, அவரது தாயார் சித்ரா சோறு ஊட்டிக் கொண்டு வந்திருக்கிறார்..

ஊட்டிய சாப்பாட்டை குழந்தை வாந்தி எடுத்த நிலையில், குழந்தைக்கு இன்னும் கொஞ்சம் சோறு வேண்டும் என்பதற்காக வீட்டிற்குள்ளே போய், சோறு எடுத்துவிட்டு திரும்பி வந்து பார்த்த சித்ரா, அங்கு குழந்தை கிஷாந்த் இல்லாததைக் கண்டு ஆடிப்போயிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்