எல்லையில் கர்நாடக MLA - தமிழக MLA நேருக்கு நேர் | Karnataka MLA | TN MLA
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலை கிராம மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தருவது குறித்து தமிழக - கர்நாடக எம்எல்ஏ-க்கள் அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர். வனப்பகுதிக்குள் உள்ள குட்டையூர் மக்கள் மருத்துவ சேவை உட்பட அனைத்து தேவைகளுக்கும் பாலாற்றை கடந்து கர்நாடக பகுதிக்கு சென்று சுமார் 110 கிலோமீட்டர் பயணம் செய்து அந்தியூர் வரவேண்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த அந்தியூர் எம்.எல்.ஏ, கர்நாடக எம்.எல்.ஏ உடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகள் உடன் நேரடியாக மக்கள் வசிக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு வசிக்கும் மக்களின் குறைகளை இருமாநில எம்.எல்.ஏ-க்களும் நேரடியாக கேட்டறிந்ததுடன், அதிகாரிகள் தங்கள் முன்னெடுப்புக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென தெரிவித்தனர்.
Next Story