குமாரசாமியை கருப்பன் என விமர்ச்சித்த கர்நாடக அமைச்சர் -நினையாத இடத்தில் இருந்து வந்த எதிர்ப்பு

x

கர்நாடக மாநில சன்னப்பட்டனா சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பிரசாரம் செய்த அகமது கான், இஸ்லாமியர்களின் ஹிஜாப் தேவையில்லை, ஆனால் அவர்களது வாக்கு மட்டும் வேண்டுமா கருப்பனே என குமாரசாமியை விமர்சனம் செய்தார். அகமதுகான் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. அவரது இனவெறி கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய அகமதுகான், குமாரசாமிக்கும், தனக்கு மிகவும் நெருக்கமான உறவு உள்ளது என்றும் அவர் என்னை குட்டையன் என்பார், அவரை நான் கருப்பன் என்பேன், இப்படி அவரை அழைப்பது முதல் முறையாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்கலாம் என்றார். எப்போதும் குமாரசாமியை நான் அப்படிதான் அழைப்பேன் என கூறிய அகமதுகான், இடைத்தேர்தலுக்காக பிரச்சினையாக்கிவிட்டார்கள், எனது பேச்சு யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்