காரைக்குடியில் வாக்கப்பட்ட தைவான் நாட்டு பெண்.. தமிழ்நாட்டிற்கு மருமகளாக பறந்து வந்த காதல் புறா

x

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடியைச் சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியர் ஆறுமுகம் - அமுதா தம்பதியின் மகன் சதீஷ்குமார், கடந்த 6 ஆண்டுகளாக தைவான் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்... அவரது நிறுவனத்தின் அருகே வேறொரு நிறுவனத்தில் பணிபுரிந்த தைவானைச் சேர்ந்த ஹோ சின் ஹீயுடன் சதீஷுக்கு காதல் மலர்ந்தது... அதன்பிறகு பணிமாறுதலால் சதீஷ் அமெரிக்கா சென்று விட்டார்...

இந்நிலையில், சதீஷ்குமார் தனது காதலியான ஹோ சின் ஹீய்வை திருமணம் செய்து கொள்ள இருவீட்டிலும் கேட்ட போது பச்சைக் கொடி காட்டவே, காரைக்குடி தனியார் திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி இனிதே திருமணம் நடந்தேறியது... மணப்பெண், மற்றும் மணமகன் உறவினர்கள், நண்பர்கள் வருகை தந்து மணமக்களை மனமாற வாழ்த்திச் சென்றனர்...


Next Story

மேலும் செய்திகள்