வயிற்றுக்குள் பஞ்சு வைத்து தைத்த அரசு மருத்துவமனை மருத்துவர்- காரைக்குடியில் அதிர்ச்சி..

x

ஆண்டாவூரணி ஊரைச் சேர்ந்த காளியம்மாள் என்பவருக்கு, கடந்த அக்டோபர் 8ம் தேதி அன்று கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதை தொடர்ந்து ஒரு வாரம் தங்கி இருந்து, வீடு திரும்பிய பிறகும் தொடர்ந்து வயிறு வலி இருந்துள்ளது. இதையடுத்து மீண்டும் காரைக்குடி அரசு மருத்துவமனை வந்து மருத்துவரை சந்தித்தபோது, முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியமான பதில் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் தொடர்ந்து வயிறு வலியுடன் துடித்த காளியம்மாள், திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், காளியம்மாள் வயிற்றில் பஞ்சு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, வயற்றில் உள்ள பஞ்சை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதையடுத்து காளியம்மாள் மகன், காரைக்குடி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவரிடம் நியாயம் கேட்க வந்த போது, அவர்பொறுப்பில்லாமல் பதில் அளித்தாக குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்