நேரில் அழைத்து கவுரவித்த கலெக்டர்... கொடுத்த உறுதி... நெகிழ்ந்து போன தூய்மை பணியாளர்கள்

x

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோட்டுச்சேரி எம்ஜிஆர் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக ஆட்சியர் மணிகண்டன் வருகை தந்தார். அப்போது கடும் மழையிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களை ஆட்சியர் மணிகண்டன் சந்தித்து பேசினார். மேலும் அவர்களை பாராட்டும் வகையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து ஆட்சியர் மணிகண்டன் தேனீர் விருந்து அளித்து கௌரவித்தார். மேலும் தூய்மைப் பணியாளர்கள் குழுவாக சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும், குடும்பத்தில் கட்டுமான தொழிலாளர்கள் இருந்தால் அவர்களை நல வாரியத்தில் இணைக்க தன்னை எப்போது வேண்டுமானால் அழைக்கலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்