இந்திய-சீன மலை உச்சி பணியின் போது ரத்த வாந்தி துடிதுடித்து நின்ற ராணுவ வீரர் மூச்சு கதறும் 5 மாத கர்ப்பிணி மனைவி
காரைக்கால் மாவட்டம் நிரவியைச் சேர்ந்த பிரேம்குமார், கடந்த 11 ஆண்டுகளாக இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படையின் 47-வது படை பிரிவில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் செவ்வந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் 5 வயதில் மகனும், 5மாத கர்ப்பிணியாகவும் செவ்வந்தி உள்ளார்.
கடந்த செவ்வாய் அன்று இந்திய-சீனா எல்லை மலைப்பகுதியில், அதிக உயரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு பிரேம்குமார் ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
தொடர்ந்து, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேம்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலமாக திருச்சி கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊரான நிரவிக்கு கொண்டு செல்லப்பட்டது. ராணுவ மரியாதையுடன் பிரேம்குமாரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
Next Story