குமரி கடற்கரையில் மாயமான சிறுமி கேரளாவில் மீட்பு.. நடுவில் நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்

x

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நரிக்குறவர் சமூக பெண்ணின் 7 வயது சிறுமி காணாமல்போனதாக கன்னியாகுமரி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞரின் புகைப்படத்தை வெளியிட்டு சிறுமியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுமியை கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் கன்னியாகுமரி போலீசார் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் போலீசாருக்கு பயந்து சிறுமியை விட்டுச் சென்றதாக தெரிகிறது. சிறுமியை கடத்திய இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்