மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் மகனும் விஷமருந்தி த*கொலை

மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் மகனும் விஷமருந்தி த*கொலை
x

குமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவரும், மகனும் விஷம் குடித்து த*கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரில் வசித்து வந்த சிவசுப்பிரமணிய பிள்ளை என்பவரின் மனைவி ஆறுமுக செல்வி, தோள் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் விஷம் குடித்து த*கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த துக்கத்தில் கடும் மனவேதனையில் இருந்து வந்த சிவசுப்பிரமணிய பிள்ளை தனது மகன் சிவராஜனுடன் வீட்டில் விஷம் குடித்து த*கொலை செய்து கொண்டார். தற்செயலாக அவருடைய வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர், இருவரும் நாற்காலியில் அமர்ந்தபடி இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து, போலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, வீட்டிற்கு வந்த போலீசார், இருவரின் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு மாதங்களில் மனைவி, கணவர், மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் த*கொலை செய்து கொண்டது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்