"கொஞ்சம் கொஞ்சமாக போகும் உயிர்.."நோயாளியின் குடும்பம் எடுத்த வீடியோ.. அதிர்ந்த மருத்துவமனை..

x

கன்னியாகுமரியில், வைரல் வீடியோ ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, கேட்பாரற்று கிடந்த நோயாளிக்கு மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

கன்னியாகுமரியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர், இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை எனக்கூறி அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.


Next Story

மேலும் செய்திகள்