`3 நாள் தடை' - சுற்றுலா பயணிகளுக்கு வெளியான முக்கிய தகவல்
பராமரிப்பு பணி காரணமாக, கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்கள் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே, திருவள்ளுவர் சிலையில் இருந்து விவேகானந்தர் பாறை வரை கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 31ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்ட இந்த பாலத்தில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிடுகின்றனர். இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக, 13ஆம் தேதி வரை கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story