காது கூசும் வார்த்தையால் திட்டிய நிதி நிறுவன ஊழியர்கள் - கட்டிட தொழிலாளி எடுத்த விபரீத முடிவு

x

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த கட்டிட தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரணியல் அருகே காரவிளை பகுதியை சேர்ந்த மணிகண்டன், கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் தக்கலையில் உள்ள வெரிடாஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில், எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடந்த மாதம் மட்டும் மாத தவணையை கட்ட தவறி உள்ளார். வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், தகாத வார்த்தைகளால் மணிகண்டனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன், தனியார் நிதி நிறுவன் ஊழியர்கள் கண்முன்னேயே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதனையடுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணிகண்டனுக்கு காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்