MP பெயரை பயன்படுத்தி பல லட்சம் மோசடி.. கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி மன்றத் தலைவி

x

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி ஊராட்சி மன்ற தலைவராக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சலோமி என்பவர், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பெயரை பயன்படுத்தி, ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் பல லட்சம் ருபாய் வாங்கி ஏமாற்றியது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. நபர் ஒன்றுக்கு 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை வாங்கிக் கொண்டு போலி பணி உத்தரவு அரசாணைகளை வழங்கி ஏமாற்றி உள்ளார். இதற்கு அவரது கணவர் சோபிதராஜ் மற்றும் அவரது தோழியான சிந்து என்பவரும் உடந்தையாக இருந்தனர். இது சம்பந்தமாக புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படாததால், கடந்த ஜூன் மாதம் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, கொல்லஞ்சி ஊராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தலைமறைவான சலோமி, சோபிதராஜ், சிந்து ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து,

தனியிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்