கோடி கோடியாக சொத்து.. 6 வாரிசுகள் இருந்தும் நேர்ந்த கதி.. மலை போல் நம்பிய கடைசி மகளும் கைவிட்டார்
குமரியில் பிள்ளைகளுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்தையும் 50 லட்சம் ரூபாய் பணத்தையும் பிரித்துக் கொடுத்த தந்தை , இன்று தனது 80 வயதில் அனாதையாக தெருவில் விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் இருந்தும் நாகர்கோவில் அருகே பீம நகரி பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன், கடைசியாக தனது வாழ்நாள் செலவுக்காக ஒதுக்கி வைத்திருந்த பணத்தை கணவரைப் பிரிந்த தனது மகள் ஒருவருக்கு கொடுத்துள்ளார். ஆனால் அவரும் தன்னை கைவிட்டு விட்டதாகவும், தன்னை பாதுகாக்குமாறும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
Next Story