குமரி சர்ச், கோயில்களை சேதப்படுத்திய சம்பவம்.. சிசிடிவியில் கிடைத்த நபர்

x

குமரியில், தேவாலயம் மற்றும் முருகன் கோயிலில் இருந்த சிலைகளை சேதப்படுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

குமரி மாவட்டம் கோனச்சேரி பகுதியில், கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்த காணிக்கை பெட்டியின் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில், அதனருகில் காவி கொடி வைக்கப்பட்டது குறித்து போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. அதேநேரம், அருகிலிருந்த இரு கோயில்களில் இருந்த சிலையின் கை உடைக்கப்பட்டதுடன், பொருட்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் கோயிலில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதை கண்டறிந்தனர். இதனையடுத்து, சிலைகளையும் அவர் சேதப்படுத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்