தண்ணீரை வைத்து மிரட்டிய பெண்.. ஒரு நொடி ஆடிப்போன போலீசார் - கடைசியில் நடந்த ட்விஸ்ட்
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடைபாதையில் வியாபாரம் செய்து வந்த நரிக்குறவர்களின் கடைகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றிய நிலையில், அதனை கண்டித்து ஏராளமான நரிக்குறவர்கள் அரசு விருந்தினர் மாளிகை முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேஷ் குமார் மற்றும் பிரின்ஸ் ஆகியோரது கார்களை நரிக்குறவர்கள் சிறை பிடித்தனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்திய போது, நரிக்குறவர் பெண் ஒருவர் தண்ணீரை தலையில் ஊற்றி கையில் தீப்பெட்டி வைத்து கொண்டு தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தது நகைப்பை ஏற்படுத்தியது.
Next Story