குமரி டு மதுரைக்கு சென்ற ஐம்பொன் சிலைகள் - 9 நாட்களுக்கு பின் வெளியான அதிர்ச்சி சிசிடிவி
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பார்த்திவபுரம் பகுதியில் உள்ள பழமையான பார்த்தசாரதி கோயிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளை போலீசார் மீட்டனர். சிலைகளை திருடிய 3 பேரை போலீசார் தேடி வந்த நிலையில் அக்கும்பலை சேர்ந்த பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மதுரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஐம்பொன் சிலைகளை போலீசார் மீட்டனர். சிலை திருட்டில் தொடர்புடைய மற்ற இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிலைகள் 9 நாட்களுக்குள் மீட்கப்பட்ட நிலையில் அவற்றை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story