#BREAKING || மகளின் பிறந்தநாளில் கொடூரமாக கொல்லப்பட்ட தந்தை - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி

x

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகளின் பிறந்தநாள் கொண்டாட இருந்த தருணத்தில் கட்டிட தொழிலாளியை திட்டமிட்டு கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி காண்போர் நெஞ்சை பதற வைத்து குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரணியல் அருகே கண்டன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயன் (44). கட்டிட தொழிலாளி.திருமணமாகி ஜெமிலா என்ற மனைவியும் 18 வயது மகளும் 15 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியில் கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் ராஜாசிங்குடன் (32). கடந்த சில மாதங்கள் மூன்பு ஆலய திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் ஜெயன் தனது மகளின் 18 வது பிறந்தநாளை கொண்டாட கேக் வாங்கி வீட்டில் கொடுத்துவிட்டு அதே பகுதியை சேர்ந்த நண்பர் நர்சிகனுடன் மீன் கடை அருகில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ராஜாசிங் தான் மறைத்து வைத்திருந்த கம்பியால் ஜெயனின் தலையில் திடீரென ஓங்கி அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்த ஜெயன் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார். கொலை செய்த ராஜாசிங் இரணியல் காவல் நிலையத்தில் சரண்டராகி போலீசாரிடம் கொலை செய்ததாக கூறி அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட ஜெயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையாளி ராஜாசிங்கிடம் இரணியல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கட்டிட தொழிலாளியை திட்டமிட்டு கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போர் நெஞ்சை பதற வைத்து குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்