ஆசை வார்த்தையால் லட்சங்களை பறிகொடுத்து நிற்கும் பேராசிரியர் - குமரி அருகே அதிர்ச்சி

x

கன்னியாகுமரி தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்த பெமிலா அருமைரோஸ் முனைவர் பட்டம் பெற்று நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், முளகுமூடு பகுதியில் தனியார் சொகுசு விடுதி நடத்தி வரும் மரிய எட்வின் ஜோஸ் அவரது நண்பரான கேரள மாநிலம் கொல்லம் அக்கனூரைச் சேர்ந்த சனல் என்பவரை பெமிலாவின் கணவர் சுவிட்லின் ஞானரெஜியிடம் துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் என கூறி அறிமுப்படுத்தி உள்ளார். அப்போது தான் அரசு கல்லூரியில் பேராசிரியர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி சுவிட்லின் ஞானரெஜியிடம்

35 லட்சம் ரூபாய் பணம், 14 சவரன் நகைகளை சனல் வாங்கி உள்ளார். மாதங்கள் பல கடந்த பின் வேலை வாங்கி தராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுவீட்லின் ஞானரெஜி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சனல் மற்றும் மரிய எட்வின்ஜோஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சனலை கைது செய்தனர். தலைமறைவான மரிய எட்வின்ஜோசை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்