பல்டி அடித்து தலைகுப்புற கவிழ்ந்த கார்..திடீரென தப்பியோடிய சிறுவன் - அதிர்ச்சி காட்சி

x

குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாறசாலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த 13 ம் தேதி மாலை களியக்காவிளை நோக்கி தனது காரை ஓட்டிச் சென்றார். அப்போது கார் செங்கவிளை பகுதியில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்து அபினேஸ் என்பவருக்கு சொந்தமான காரின் மீது மொதி சாலையின் நடுவே பல்டி அடித்து தலைகுப்புற கவிழ்ந்தது. விபத்து ஏற்பட்ட சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில் காரினுள் இருந்த சிறுவன் அங்கிருந்த தப்பி ஓடினார். விபத்து காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில் அபினேஷ் விபத்து சம்பந்தமாக கொல்லங்கோடு போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் 17 வயது சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்