"5 நாள் ஆகுது.. மகனை பற்றி எந்த தகவலும் இல்லை" கடலில் மாயமான மீனவர்.. கதறி அழும் உறவினர்கள்

x

கோவா கடலில், இந்திய நீர்மூழ்கிக் கப்பலால் விபத்து ஏற்பட்டு மாயமான குமரி மீனவர்களை மீட்க அரசு அலட்சியம் காட்டுவதாக உறவினர்கள் கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கோவா கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இந்திய நீர் மூழ்கிக்கப்பல் மோதியதில், அவர்களின் படகு கவிழ்ந்து அதிலிருந்த 13 பேர் கடலில் தத்தளித்தனர். அந்த வழியாக மற்றொரு படகில் வந்த மீனவர்கள், கடலில் தத்தளித்த 11 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். ஆனால், படகின் ஓட்டுநர் அறையில் இருந்த குமரி மீனவர் ஜெனிஷ்மோன், ஆந்திரா தொழிலாளி ரமேஷ் ஆகியோரை காணவில்லை. விபத்து நடந்து 5 நாட்களாகியும் ஜெனிஸ்மோன் கிடைக்காததால், அவருடைய உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

மாயமானவர்களைத் தேடுவதில் அரசு அலட்சியம் காட்டுவதாக உறவினர்கள் கண்ணீர் மல்க குற்றம்சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்