23,000 ரூபாய் செலவு வைத்த ஒற்றை வீடியோ... தேவையா இந்த வேண்டாத வேலை

x

23,000 ரூபாய் செலவு வைத்த ஒற்றை வீடியோ... தேவையா இந்த வேண்டாத வேலை

கன்னியாகுமரி அருகே ஓட்டுநர் உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு ரூபாய் 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மணவாளக்குறிச்சி, திங்கள்நகர் மற்றும் தோட்டியோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி மாணவர்கள் சாலையில் ஆபத்தான முறையில் சாகசம் செய்து கொண்டு வந்தனர். அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களை சோதனை செய்தபோது ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை இயக்கியது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் வாகன சட்டப்படி ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை இயக்குதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரூபாய் 23 ஆயிரம் அபராதம் விதித்தனர். இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்