கஞ்சா கருப்பு சொன்னதும்.. ``ஏங்க அவர் திமுக-ங்க.. அதிமுகனு நினைச்சி பேசுறீங்க’’ - கலாய்த்த மக்கள்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கார்ணாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நடிகர் கஞ்சா கருப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், விழாவுக்கு ஏற்பாடு செய்த அரசப்பனுக்கு செல்வாக்கு இருப்பதால், அவர் தேர்லில் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பேன் என்று கூறினார். அதற்கு அரசப்பன், தான் ஒரு சமூக ஆர்வலர் என்று கூறியதால், மீண்டும் பேசிய கஞ்சா கருப்பு, அருகில் இருந்த மருத்துவர் கலையரசன் தேர்தலில் நின்றால் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பேன் என்று கூறினார். அப்போது, மருத்துவர் கலையரசன் திமுகவைச் சேர்ந்தவர் என பொதுமக்கள் கூறியதால், சிரிப்பலை நிலவியது.
Next Story