ஹாஸ்பிட்டலில் கர்ப்பிணி கிடந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சியான MLA - பிடித்து விளாசி எடுத்த வீடியோ
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் அதிரடி ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்
ஒரு கர்ப்பிணி பெண் கேட்பாரற்று படுத்து கிடந்த நிலையில் மருத்துவரை அழைத்து அப்பெண்ணை கவனிக்க எம்.எல்.ஏ எழிலரசன் கேட்டு கொண்டார். மருத்துவமனையின் 5-வது மாடியில் பிரசவித்த தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளோடு தரையில் படுத்து கிடப்பதை கண்ட அவர் , மருத்துவமனை அதிகாரிகளை அழைத்து உடனடியாக படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தர உத்தரவிட்டார்.இதையடுத்து இரண்டாவது மாடியில் காலியாக இருந்த படுக்கைகளை மருத்துவமனை ஊழியர்கள் சுத்தம் செய்து பிரசவித்த தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளுடன் தங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
Next Story