"மற்ற கட்சியில் இருந்து வராங்க.." மேடையில் ஓபனாக போட்டுடைத்த புஸ்ஸி ஆனந்த் - எகிறும் அரசியல் சூடு..!

x

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாகரல் கிராமத்தில் ஆதரவற்ற மூதாட்டிக்கு தவெக நிர்வாகிகள் வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். மாகரல் அந்த கிராமத்தில், எல்லம்மாள் என்ற ஆதரவற்ற மூதாட்டி, குடியிருக்க வீடு இல்லாமல் சிரமத்தில் இருந்து வந்த நிலையில், தவெக நிர்வாகிகள் ஒன்றிணைந்து, அந்த மூதாட்டிக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், மாகரல் கிராமத்திற்கு வருகை தந்து மூதாட்டி எல்லம்மாளிடம் புதிய வீட்டை ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து, தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய ஆனந்த், வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில், விஜய்யை ஆட்சியில் அமர வேக்க வேண்டும் என்பதே நம் இலக்கு என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்