"இறந்த பிறகும் கூட நிம்மதி இல்லாத அவலம்" சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால் மக்கள் அவதி | Kanchipuram

x

மயானம் செல்ல பாதை இல்லை...காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகே மயானத்திற்கு பாதை வசதி இல்லாததால் இறந்தவர்களை விளை நிலங்களில் இறங்கி மயானம் எடுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது... கம்மாளம்பூண்டி பழத்தோட்டம் அருகே மேட்டு காலனி, பள்ள காலனி பகுதிகளில் இறந்தவர்களுக்காக அக்கிராமத்தில் பட்டா விளைநிலங்களுக்கு நடுவே அரசு ஒதுக்கீடு செய்த மயானம் உள்ளது... ஆனால் அங்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனால் சடலங்களை விளைநிலங்களில் இறங்கி சுமந்து செல்லும்போது, நில உரிமையாளர்களுக்கும் கிராம மக்களுக்கும் வாக்குவாதம் எழுவது தொடர்கதையாக உள்ளது. பள்ள காலனியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிராம மக்கள் அவரது உடலை விளைநிலத்தில் இறங்கி மயானத்திற்குத் தூக்கிச் சென்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக மயானம் செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் மயானத்தை சீரமைத்துத் தரவேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்