பைக்கில் மோதிய லாரி.. தூக்கி வீசப்பட்ட தாய், 2 மகன்கள்.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

x

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும், 2 மகன்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவரின் மனைவியும், இரண்டு மகன்களும், காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, ஒரே இருசக்கர வாகனத்தில் ஓச்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், தாமல் என்ற இடத்தருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி உரசியதில், நிலைத்தடுமாறி மூவரும் கீழே விழுந்தனர். அப்போது மூவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சேட்டுவின் மகன் மனோஜ், மனைவி கஜலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்றொரு மகன் மதன், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறிது நேரம் கழித்து பின்னால் இருசக்கரவாகனத்தில் வந்த சேட்டு, தனது மனைவியும் மகன்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்தை கண்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த விபத்து குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்