ஏகாம்பரநாதர் 192 அடி ராஜகோபுரத்தில் இரவில் கேட்ட சத்தம் - எட்டிப்பார்த்து பதறிய காஞ்சிபுரம் மக்கள்

x

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் கோபுரத்தில், மதுபோதையில் ஏறிய நபரை போலீசார் மீட்டனர். இக்கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 192 அடி உயர ராஜகோபுரத்தில் கட்டைகளால் சாரம் கட்டி திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இரவு நேரத்தில் ராஜகோபுரம் மேலிருந்து ஒருவர் சத்தம் போட்டதால், அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபரை போலீசார் மீட்ட நிலையில், போதை தெளிந்து மீண்டும் அந்த நபர் மதுபானம் கேட்டுள்ளார். விசாரணையில், அந்த நபர் மேல்ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பதும், கோவில் வாசலில் சுற்றித்திரிந்தபோது, போதை தலைக்கேறி கோபுரம் மீது ஏறியதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்