மெடிக்கல் காலேஜுக்குள் தேங்கிய மழைநீர் - ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அவலநிலை..நோயாளிகள் அவதி

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் மருத்துவக் கல்லூரிக்குள் மழை நீர் புகுந்ததால் அவசர சிகிச்சை மையம் மூடப்பட்டுள்ள நிலையில் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.

தண்டலத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில் கன மழையால் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளது... இதனால் தற்காலிகமாக அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது. குறிப்பாக மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். மழை நீர் வெளியேற வழி இல்லாததால் மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது... சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது மழைநீர் செல்லும் கால்வாய்கள் அடைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது... மேலும் அருகில் உள்ள செம்பரம்பாக்கத்திற்கு செல்லும் கால்வாய் அருகே கல்லூரியின் கழிவுநீர் செல்வதற்காக பூமிக்கடியில் குழாய் பதித்து வெளியேற்றப்பட்டதை நீர்வளத்துறை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்