விஷச்சாராய விவகாரத்தில் அண்ணாமலை அனுப்பிய நோட்டீஸ்

x

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நோட்டீஸ் பெற்ற 3 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், கருணாபுரத்தில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்