சுரங்கப்பாதையில் சிக்கிய பள்ளி பேருந்து.. உடனே மாணவர்கள் எடுத்த ஆபத்தான முடிவு

x

கள்ளக்குறிச்சி அருகே ரயில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் பள்ளிப்பேருந்து சிக்கிக் கொண்ட நிலையில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினை தீர்த்தாபுரம் கிராமத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் கனியாமூர் தனியார் பள்ளி வாகனம் சிக்கிக் கொண்டது... பொதுமக்கள் உதவியுடன் பேருந்து கரையேற்றப்பட்டு மாணவ மாணவிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து பள்ளி சென்றனர்... இதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் ரயில்வே நிர்வாகத்திடமும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.. அவ்வப்போது மாட்டிக்கொள்ளும் வாகனங்களை இயக்க முடியாததால் பழுது பார்க்கும் கடைக்கு சென்றால் பல்லாயிரம் ரூபாய் வரை செலவு ஆவதாக ஓட்டுநர்கள் கவலையை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்