திடீரென வழக்கறிஞர்கள் செய்த செயல் - உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கண்டித்து வழக்கறிஞர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்குறிச்சி சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வாகனங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கறிஞர்களுக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர்கள், சுங்கச்சாவடி நிர்வாகத்தை எதிர்த்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்.
Next Story