ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவருக்கு மிரட்டல் - பரபரப்பு புகார் | Kallakurichi

x

சங்கராபுரம் அருகே அரசம்பட்டு ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவருக்கு, ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர், செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசம்பட்டு ஊராட்சியில் நடைபெறும் பணிக்காக, துணைத் தலைவர் சத்யாவின் கைபேசி எண்ணில் வரும் ஓடிபி எண்ணை பயன்படுத்தி பணம் எடுத்து வருவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஓடிபி கேட்டு, துணைத் தலைவர் சத்யாவின் கணவர் நடராஜனிடம், ஊராட்சி மன்றத் தலைவர் வாசுகியின் கணவர் கருணாநிதி பேசியுள்ளார். அப்போது, ஆபாசமாக பேசிய கருணாநிதி, ஓடிபி சொல்லவில்லை என்றால் காலையில் முடித்து விடுவேன் என நடராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்த‌தாக கூறப்படுகிறது. இதனால், இரவில் இருந்து வீட்டுக்கு வராமல் நடராஜன் தலைமறைவானதால், அவரை கண்டுபிடித்து தருமாறு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சத்யா போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, உயிருக்கு பயந்து தலைமறைவாக இருந்த நடராஜனை ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடித்த போலீசார், காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை ந‌டத்தி, பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்