வட மாவட்ட மக்களை குறிவைத்து கள்ளச்சாராயம் காய்ச்சுவது ஏன்? - சோக பின்னணியும்...ஷாக் ரிப்போர்ட்டும்
வட மாவட்ட மக்களை குறிவைத்து
கள்ளச்சாராயம் காய்ச்சுவது ஏன்?
சோக பின்னணியும்...ஷாக் ரிப்போர்ட்டும்
கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ச்சியாக வட மாவட்டங்களில் நடைபெறுவது ஏன் ? இதனை தடுப்பதற்கான வழிகள் என்ன? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து ஏராளமானோர் உயிரிழந்த விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது....
கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில் எண்ணற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அதனையும் மீறி இவை தொடர்கதையாகி வருகிறது...
அதிலும் குறிப்பாக, வட மாவட்டங்களில் இவ்வகையான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்..
இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே, விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் கூறுகின்றனர்..
இவற்றிற்கு கல்வியிலும், பொருளாதார சூழலில் வடமாவட்டங்கள் மிகவும் பின் தங்கியிருப்பதும் ஒரு காரணம் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்..
குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்கள் அதிக எண்ணிக்கையிலான குக்கிராமங்களை கொண்டதாக அமைந்திருக்கின்றன. இந்த மாவட்டங்களில் கல்வி அறிவு என்பது குறைவாகவே இருக்கிறது .
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பரப்பளவு 3529.67 சதுர கிலோமீட்டர். இந்த மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுமே ஊரகப் பகுதிகள் என்றும், நகர பகுதிகளாக எவையும் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 562 வருவாய் கிராமங்களும், 412 கிராம பஞ்சாயத்துகளும் இந்த மாவட்டத்தில் அடங்கியுள்ளன.
இப்படி கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய மக்கள் அதிகளவில் கூலி வேலை பார்ப்பவர்களாகவே உள்ளதால், மலிவு விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை நாடுவதாக கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களுடன் தெரிவிக்கின்றனர்..
இதுகுறித்து பேசிய கல்வியாளர் ஸ்ரீனிவாசன் சம்பந்தம், அரசு விசாரணைக்காக அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம், ஆணி வேராக இருக்கும் பிரச்சினைகளை கண்டறிய வேண்டும் எனக் கூறுகிறார்...
ஸ்ரீனிவாசன் சம்பந்தம், கல்வி ஆலோசகர்
குறிப்பாக அங்குள்ள குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்..
ஸ்ரீனிவாசன் சம்பந்தம், கல்வி ஆலோசகர்
இப்படி ஆணி வேரில் உள்ள பிரச்சினைகளை களைவதன் மூலம் கள்ளச்சாராயம் என்ற கோரப்பிடியில் இருந்து கிராமப் பகுதி மக்கள் விடுபடுவர் என்பது பலரின் கருத்தாக உள்ளது..