கணவன் இறந்த நொடியே கதறி அழுது அவர் உடல் மேலே பிரிந்த மனைவி உயிர்

x

கள்ளக்குறிச்சி அருகே கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிர் துறந்த சம்பவம் நெகிழ்வையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காட்னந்தல் கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதி செல்லமுத்து - ஏலக்கண்ணியும் தனியாக வசித்து வந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்ட செல்லமுத்துவுக்கு நேற்று திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் முதியவர் உயிரிழந்தார். கணவனின் உடலை பார்த்து கதறி அழுத மூதாட்டியும் தனது உயிரைதுறந்தார். தந்தை இறந்த அரை மணி நேரத்தில் தாயும் உயிரிழந்த சம்பவம் பிள்ளைகள், உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்