சோறு போட்ட குடும்பத்தை கூறுபோட பார்த்த துரோகம் - கொடூர சாமியாரின் குரூர பின்னணி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கடன் தொல்லையால், விஷம் கலந்த தீர்த்தத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சாமியார், ஒரு குடும்பத்தையே விஷம் வைத்து கொல்ல முயன்றது ஏன் ? இதன் பின்னணி என்ன ? பார்க்கலாம் விரிவாக...
தீர்த்தம் என்ற பெயரில் விஷத்தை கொடுத்து ஒரு குடும்பத்தை கொல்ல பார்த்ததாக சாமியார் மீது முன்வைக்கப்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது...
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கிய நிலையில், முதற்கட்ட விசாரணையில் பல விவரங்கள் தெரியவந்துள்ளது.
15 ஆண்டிற்கு முன் அமகளத்தூர் கிராமத்திற்கு வந்த சாமியார் எனப்படும் முரளியை, கணேசன் தனக்கு சொந்தமான இடத்தில் தங்க வைத்துள்ளார்.
அத்துடன் அங்கேயே அங்காளம்மன் கோவில் அமைத்து, அருள் வாக்கு கூறி வந்திருக்கிறார் முரளி...
இது மட்டுமன்றி, ரியல் எஸ்டேட் தொழிலும் மற்றொரு புறம் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்துள்ளார். இதற்காக அவர், கணேசன் உட்பட பலரிடம் கடன் வாங்கியுள்ளார்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் முரளி தவித்து வர, கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுக்க தொடங்கி விட்டனர்.
மேலும் 60 லட்சம் வரை பணமாகவும், 70 சவரன் நகையாகவும், வாங்கி கடையில் அடகு வைத்து செலவு செய்துள்ளார் என்றும், வருடா வருடம் கோவில் திருவிழா, பூஜைகள், அன்னதானம் வழங்கப்படுவதால், அதற்கான செலவுகளையும் செய்து வந்துள்ளார்.
இப்படி அடுக்கடுக்கான செலவுகள், கடன்களால் நீண்ட நாட்களாக அவர் நிதி நெருக்கடியில் இருந்து வந்ததாக தெரிகிறது.
கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்த போது தான் விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது...
பாலிஷ் போடுவதற்கும் கோயிலை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த சுத்திகரிப்பான் திரவியத்தை தண்ணீரில் கலந்து தீர்த்தம் என கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜாம்பாள் அவரது இரண்டு மகன்கள் முத்தையன் கண்ணன் ஆகியோருக்கு கொடுத்துள்ளார்..
இதனால் அவர் மீது கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி சிகிச்சை பெற்று வரும் அர்ச்சகர் முரளி சிகிச்சை பெற்று வீடு திரும்பினால் அடுத்த நொடியே போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.